2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கை விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது-போகொல்லாகம

Super User   / 2010 ஜனவரி 31 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உட்பட இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடமுடியாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடந்து முடிந்த  ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றவராக தெரிவிக்கின்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்தத் தேர்தல் முடிவுகளில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்  பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  இதில் வெளிநாடுகள் தலையிடவேண்டும் எனவும் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடமுடியாது என்பதை ஜெனரல் சரத் பொன்சேகா விளங்கிக்கொள்ளவேண்டுமென்றும், ஜெனரல் சரத்  பொன்சேகாவுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் அவர் நீதிமன்றத்திற்கு செல்லமுடியும் எனவும்  வெளிவிவகார அமைச்சர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X