2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நோர்வே, அமெரிக்கா கோட்டாபய குற்றச்சாட்டுகளை நிராகரிப்பு

Super User   / 2010 பெப்ரவரி 11 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோற்றுப்போன ஜனாதிபதி அபேட்சகரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா இராணுவ சதிக்கு திட்ட்டமிட்டு இருந்தார் என்றும் இராணுவத்தினுள் பிளவுகளை ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு கடந்த திங்கட் கிழமை iranuwa பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் உள்ளார்.

இந்த சதிகளுக்கு நோர்வே மற்றும் அமெரிக்கா நாடுகளும் உடந்தை என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில் சாடியிருந்தார். 

இந்த குற்றச்சாட்டுகள் உண்மை அற்றவை என்று நோர்வே தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதேவேளை நோர்வே "இன்னொரு நாட்டின் தேர்தலில் தலையிடுவதில்லை என்றும் ஒருபோதும் ஜனநாயக ரீதியில் தேர்தெடுக்க பட்ட அரசாங்கத்தையோ அன்றி ஜனாதிபதியையோ குழப்புவதில்லை" என்றும் அந்நாடு  கூறியிருக்கிறது. உயர்ஸ்தானிகர் தோரே ஹட்ட்ரேம்  இந்த விடயத்தை இலங்கை வெளியுறவு அமைச்சின் கவனத்திர்த்கும் கொண்டுவந்துள்ளார்.
இதேவேளை அமெரிக்கா  கோட்டாபய ராஜபக்சவின் குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"அமெரிக்கா எதிர்க்கட்சி வேட்பாளருக்கு தேர்தலில் நிற்க நிதியுதவி செய்ததென்று கூறுவதில் கிஞ்சித்தும் உண்மை இல்லை" என்று  அந்த அறிக்கை கூறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .