2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வட-கிழக்கில் போட்டியிட மனோ கணேசன் ஆலோசனை

Super User   / 2010 பெப்ரவரி 17 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுவது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி ஆலோசித்துவருகிறது என அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் தமிழ் மிரர் இணையத்தளத்துக்கு சற்று முன் அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது தொடர்பாக வினவியபொழுதே தாங்களும் வடக்கு,கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்குரிய ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தாம் குறித்து அறிவுறுத்தியுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

இதேவேளை,ஐக்கியதேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, மனோ கணேசன்,மங்கள சமரவீர,ரவூப் அகீம் ஆகியோர் யானை சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக இன்று மாலை அறிவித்திருந்தார்.

இது குறித்து தமிழ் மிரர் மனோ கணேசனிடம் கேள்வி எழுப்பியது.

இதற்குப்பதிலளித்த அவர் கட்சியின் சின்னம் எப்போதுமே ஒரு பிரச்சினையல்ல.எனினும்,ஆசன ஒதுக்கீடுகளின்போது முரண்பாடுகள் எழக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்று கூறினார்.

இருந்தபோதிலும்,தமது ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக்கட்சியின் மீது நம்பிக்கை கொன்டுள்ளது என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .