2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அதாவுல்லாவின் கட்சி கிழக்கு மாகாணத்தில் குதிரையா? வெற்றிலையா?

Super User   / 2010 பெப்ரவரி 17 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்துப்போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது.

இறுதி முடிவெடுப்பதற்கான அரசியல் உயர் பீடக்கூட்டம் அமைச்சர் அதாவுல்லா தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தேசிய காங்கிரஸ் போட்டியிடத்தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ஸ தலைமையிலான சுதந்திரக்கட்சியுடன் தமது கட்சியின் ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக தேசிய காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதன்மூலம் தமது பிரதிநிதித்துவ எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தால் தமது கட்சியின் குதிரை சின்னத்தில் போட்டியிட தேசிய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதேவேளை,தேசிய காங்கிரஸுக்கு அக்கரைபற்று பிரதேசத்தை தவிர ஏனைய பகுதிகளில் ஆதரவு இல்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துக்காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து விசாரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாவுல்லாவுடன் தொடர்புகொள்ள தமிழ் மிரர் முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை. 

You May Also Like

  Comments - 0

  • pottuvilan Thursday, 18 February 2010 06:12 PM

    how he will be reply for you?,because the fact is that no support even Akkaraipattu.

    Reply : 0       0

    Lam Thursday, 18 February 2010 07:36 PM

    is it thesiya congress? or Akarapathu congress?, Atavulla knows he has very less chance when contest in vetrilay.

    Reply : 0       0

    Alithamby Nakeel Friday, 19 February 2010 05:19 AM

    Whatever the Muslim politicians decide with their own political milage the poor voters are really going to pay for it. while Ferial Ashraff and Nowsad join UPFA Cegu Issadean has already joined SLMC. The fate of Myown Musthafa is not known yet. The decial by Athaulla is going to be a very crucial one to be taken.Afetr all Muslim voters are going to be divided as more independent groups are going to field candidates for Digamadulla.
    This time, rather voting and securing preferencial votes the first decision is the victiry for the politicails, especially in Digamadulla.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .