2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கருணாவுக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவி கிடைக்குமா?

Super User   / 2010 பெப்ரவரி 18 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

  பி.எம்.முர்ஷிதீன் 

அமைச்சர் விநாயக்மூர்த்தி முரளிதரன் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்புரிமை பெறுவாரா,இல்லையா என்ற முடிவு எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை தெரியவரும் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தமிழ் மிரர் இணையதளத்துக்கு இன்று மாலை தெரிவித்தார்.

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியான அமைச்சர் முரளிதரன் பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தேசியப்பட்டியல் வாய்ப்புக்குரியவராக கருணா அம்மான்   கருதப்பட்டபோதிலும்,தற்போது போட்டியிட்டால் மாத்திரமே தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் கிழக்கு மாகாண மக்களின் வாக்குகள்  எதிர்க்கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்தமையும் ஒரு காரணம் எனக்கூறப்படுகிறது.

எனினும்,அமைச்சர் முரளிதரனுக்கும்,ஜனாதிபதிக்கும் இடையிலான உறவுகளில் எந்த வித பாதிப்பும் இல்லை என்றும் அமைச்சின் பேச்சாளர் மேலும் தமிழ் மிரருக்கு  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .