2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

நுஆ - சுதந்திரக்கட்சி இணைப்பு;கருத்து வெளியிட பேரியல் அஷ்ரப் மறுப்பு

Super User   / 2010 பெப்ரவரி 21 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷீதீன்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தலைமையிலான 'நுஆ' கட்சியின் 250 ஆதரவாளர்கள் கட்ந்த வாரம் இணைந்து உறுப்புரிமை பெற்றுக்கொண்டமை தெரிந்ததே.

நுஆ கட்சியின் எதிர்காலம் குறித்து அமைச்சர் பேரியல் அஷ்ரபுடன் தமிழ்மிரர் இணையதளம் சற்று முன்னர் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியது.சுதந்திரக்கட்சியுடன் இணைந்தது தொடர்பாக தன்னால் கருத்துக்கள் எதனையும் கூற முடியாது என அமைச்சர் பேரியல் அஷ்ரப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரின் ஆங்கில வடிவின் முதல் எழுத்துக்களைக்கொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் 'நுஆ' என்று பெயர் வைத்திருந்தார்

.அவரது மறைவுக்குப்பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டபோது நுஆக்கட்சி அமைச்சர் பேரியல் அஷ்ரபின் தலைமையின் கீழ் வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்ட நுஆக்கட்சியின் பிரதிதலைவர் சட்டத்தரணி அபுல் கலாம் தமிழ் மிரருக்கு கருத்து வெளியிட்டபோது நுஆக்கட்சி மிகவும் சாதாரண  நிலையில் செயற்படும் எனக்கூறினார்.

சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமை பெற்றுள்ள தங்களிடம் ஜனாதிபதி கட்சியை ரத்துச்செய்யுமாறு கோரிக்கை விடுத்தால் என்ன முடிவு எடுப்பீர்கள் எனத்தமிழ் மிரர் வினவியது.

ஜனாதிபதி அவ்வாறான கோரிக்கையொன்றை தமது கட்சிக்கு விடுக்கமாட்டார் என்றும் சட்டத்தரணி அபுல் கலாம் தெரிவித்தார்.   








You May Also Like

  Comments - 0

  • Pottuvilan Sunday, 21 February 2010 04:52 PM

    How is the offer?

    Reply : 0       0

    அப்பாவி Monday, 22 February 2010 02:15 AM

    செயற்படாத கட்சி இருந்தென்ன இல்லாமெலென்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .