2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

போலி ஆவணங்கள் மூலம் அரச காணிகள் துஷ்பிரயோகம்

Super User   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(காந்த்ய சேனநாயக்க )

தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு  சபைகளின் பெயரில் போலியான முறையில் உறுதிப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, அரசாங்கத்திற்கு சொந்தமான பல ஏக்கர் காணிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை மோசடிப் புலனாய்வு பிரிவு மேற்கொண்டுவருகின்றது.

மோசடி புலனாய்வு பிரிவின் தகவல் படி,  போலியான முறையில் உறுதிப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட காணிகள் பல,புத்தளம் மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்தகைய போலி உறுதிப்பத்திரங்களை சட்டத்தரணி ஒருவர் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு சபைக்கு அனுப்பிய போதே இந்நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்தது.

அரச காணிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு  அண்மையில் கவனம் செலுத்தியுள்ளது.

அரச காணிகளை பிழையான வழியில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு  என பொலிஸார் அறிவுறித்தப்பட்டள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .