2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசாங்கம், த.தே.கூட்டமைப்புடன் ஐ.தே.க. ஒத்துழைக்கும் : ரணில்

Super User   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஐக்கிய தேசிக் கட்சி ஒத்துழைக்கும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இந்தியாவில் 'த ஹிந்து' பத்திரிகையின் செய்தியாளர்களுடன் உரையாடும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

'இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என நாம் விரும்புகிறோம். இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கம் ஆகியனவற்றுடன் நாம் ஒத்துழைப்போம்' என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

வடமாகாண சபைக்கான தேர்தலை எப்போது நடத்துவது என்பதைத் தீர்மானிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை மாற்றமடைந்துள்ள தற்போதைய சூழ்நிலையில் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய விடங்கள் குறித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

'மாறியுள்ள சூழ்நிலை குறித்து த.தே.கூ.வும் யதார்த்தபூர்வமாக இருக்க வேண்டும். அத்துடன் சில விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்' என ரணில் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X