2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இந்திக சிறி அரவிந்த)

எம்.வி. சன் ஸீ கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்றவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

புலிகளின் நிதி சேகரிப்பு முயற்சியொன்றில் சந்தேக நபரின் பெயர் குறிப்பிடப்பட்டமை தொடர்பான பத்திரிகை செய்தியொன்றை கனேடிய எல்லை முகவரகத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சமர்ப்பித்துள்ளனர். அந்நபர், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நிதி சேகரிப்பதற்காக 12  ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட தூதுக்குழுவொன்றின் அங்கத்தவராக இருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அடையாளம் காண்பதற்கான ஆரம்பக்கட்ட நேர்காணலின்போது, தான் தமிழீழப் புலிகளின் அங்கத்தவர் என்பதை மேற்படி நபர்  நிராகரித்தார். இலங்கைக்கு வெளியே எந்த நாட்டிற்கும் தான் பயணம் செய்ததில்லை எனவும் அவர் கூறினார்" என கனேடிய எல்லை சேவைகள் முகவரகத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஜெனிபர் பிரிபர்க் கூறினார்.

அதன்பின் மேற்படி பத்திரிகை ஆக்கத்தை காட்டியவுடன், தான் ஐரோப்பிய நாடொன்றுக்குப் பயணம் செய்ததாக ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் ஊடக அங்கத்தவராகவே அக்குழுவில் பயணம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார் என மேற்படி முகவரகம் கூறியுள்ளது.

எம்.வி.சன் ஸீ கப்பல் மூலம் 492 பேர் கனடாவுக்குச் சென்றனர். இவர்களில் பாதுகாப்புக் காரணங்களின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முதலாவது நபர் இவராவார். ஏனையோர் அடையாளம் காண்பதற்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X