2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் உடைப்பு:பொலிஸார் விசாரணை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

டொரொன்டோவிலுள்ள  கனேடிய தமிழ் காங்கிரஸின் அலுவலகம் உடைக்கப்பட்டதுடன், அங்குள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் கனேடிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கனேடிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளர்  டேவிட் பூபாலப்பிள்ளை, குறித்த அலுவலகத்தின் அறைகளில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன், கணினிகள் மற்றும் தொலைபேசிகள்  நிலத்தில் போடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன், வரவேற்பாளர் அறை மேசையிலிருந்த கணினி  எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த மாதம் எம்வி சன் ஸீ கப்பலில் வந்த 492 இலங்கைக் குடியேற்றவாசிகள் தொடர்பான விபரங்கள் மேற்படி கணினியில் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும் பூபாலப்பிள்ளை தெரிவித்தார்.

சன் ஸீ கப்பல் விடயம் தொடர்பில் தாம் தலையிட்டதன் காரணமாகவே தமது அலுவலகத்தின் மீது இலக்கு வைக்கப்பட்டது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும் எனவும் அவர் கூறினார். 

சன் ஸீ கப்பலில் வந்தவர்களின் பெயர்களை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை புலனாய்வுத் துறை இதன் பின்னணியில் இருக்கலாம் என தான் நம்புவதாகவும் பூபாலப்பிள்ளை கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் டொரொன்டோ பொலிஸார் மிகவும் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  பூபாலப்பிள்ளை தெரிவித்தார்.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .