2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் ரணில் சாட்சியமளிக்கமாட்டார்'

Suganthini Ratnam   / 2011 மார்ச் 25 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி ஜயசுந்தர)

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் ரணில் விக்கிரமசிங்க கற்றுக்கொண்ட  பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார குமாரதுங்க ஆகியோர் ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதில் ஆர்வமாக இருந்தனர். ஆனால்,இதுவரை அவர்கள் சாட்சியமளிக்காத நிலையில் ஆணைக்குழுவினால் இறுதி அறிக்கையை தயாரிக்க முடியாதுள்ளது என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் "இனங்களை ஐக்கியப்படுத்தவும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவுமே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், ஆணைக்குழு இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதில் ஆர்வமாக இல்லை"  என  ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

"எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கமாட்டார் " எனவும் அவர் கூறினார்.

இந்த ஆணைக்குழுவிற்காக பல மில்லியன் ரூபாய் தேவையின்றி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், இறுதி அறிக்கை வெளிவர ஒரு வருடம் தேவைப்படுகின்றது திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹசன் அலி மற்றும் த.தே.கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா ஆகியோர் தமது கட்சிகளின் தலைவர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர்கள் நாடு திரும்பியதும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் தொடர்புகொள்வர் என தெரிவித்தனர்.

அடுத்த மாதம் ஆணைக்குழு தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .