2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நியூஸிலாந்து பிரதமருக்கு பதிலாக உயர்ஸ்தானிகர் இலங்கை வருவார்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்திய சேனநாயக்க)

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியை நியூஸிலாந்து பிரதமருக்குப் பதிலாக இந்தியாவிலுள்ள நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர்  நேரில் பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெறவுள்ள இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியை பார்வையிட வருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பு குறித்து நியூஸிலாந்துப் பிரதமர் சந்தோஷமடைந்தார். இருப்பினும் மாகாணங்களுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு  தற்போது தான் அவர் வெலிங்டனுக்கு வந்துள்ளார்.  இந்த நிலையில் அவருக்கு இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளுவதற்கு நேரமில்லையெனவும் அவர் கூறினார்.

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியை பார்வையிட வருமாறு நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீக்கு ஜனாதிபதி நேற்று அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0

  • Saratha Monday, 28 March 2011 05:13 PM

    ஒரு அமைச்சர் வரக்கூடா நேரமில்லையா?

    Reply : 0       0

    jaliyath Monday, 28 March 2011 06:19 PM

    இந்த வெள்ளயர்களே இப்படித்தான் ,யுத்தம் என்றால் ஆயுதம் தர வருவார்கள் .அல்லது பிரிவினை உண்டு பன்ன வருவார்கள்

    Reply : 0       0

    unmai Monday, 28 March 2011 10:39 PM

    மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க விரும்பாத பொறுப்புள்ள பிரதமர் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X