2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'நல்லிணக்க ஆணைக்குழு முன் ரவூப் ஹக்கீம் சாட்சியமளிக்கமாட்டார்'

Super User   / 2011 மார்ச் 28 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சாட்சியமளிக்கமாட்டார் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாட்சியங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் சமர்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சாட்சியமளிப்பார் என அக்கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சியங்கள் பதிவு நடவடிக்கை முடிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடக பேச்சாளர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கடந்த ஒரு வருட கால பகுதியில் நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, திருகோணமலை, காலி, மாத்தறை, புத்தளம், கண்டி மற்றும் அநுராதபுரம் ஆகிய  மாவட்டங்களுக்கும் பூஸா தடுப்பு முகாமிற்கும் நேரடியாக சென்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கைதிகளின் சாட்சியங்களை பதிவுசெய்திருந்தது.

எதிர்வரும் மே 15ஆம் திகதிக்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 28 March 2011 08:58 PM

    ரவுப் ஹக்கீம் வக்கீல். வழக்கறிஞர் ஒருவருக்கு நேரில் சென்று சொல்ல இயலாமை ஆச்சரியம் தான்!
    நான் தேவலையே, யாரோடும் ஒலி அழைப்பில் பேச விளைவதில்லை ஒன்றில் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல், ஒரு காலம், வருமாக இருக்கும், ஒன்லைன் விசா மாதிரி, நீதி மன்றுகளிலும் மின்னஞ்சல் மூலம் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று- பணம் கடன் அட்டை தானியங்கியில்- தேர்தல் வாக்கு இலத்திரன் கருவியில்- இப்படியே போனால் ரொபோ ஆட்சி தான் போங்கள்! பிள்ளைகளைக் கூட அவ்வாறே பெற்றுக்கொள்வர் டிசைனர்க்ளோத்ஸ் ஆயத்த ஆடைகள் மாதிரி செக்ஸ் பொம்மைகள்...

    Reply : 0       0

    xlntgson Tuesday, 29 March 2011 09:11 PM

    ஏன் ஒலி அழைப்புகளை விரும்புவது இல்லை என்றால்... அழைத்தால் நேர்மையாக பேசும் ஆட்கள் குறைந்து விட்டனர் வேறு எண்ணுக்கு முயற்சிக்கவும் என்கிற ஒலிநாடா, கதைகளே அதிகம் அதை விட எரிச்சல் ஊட்டுகிறது. நமக்கு தேவை இல்லாத இசை-இசை அல்ல ஆ ஊ என்று நரி ஊளை மாதிரி இருக்கிறது- பிடித்துக்கொண்டிருங்கள் உங்களை தொடர்பு கொள்வோம் என்று சூடாகிறவரை பிடித்துக்கொண்டிருக்க வேண்டியது தான் வெறுப்பூட்ட எளிய வழி. இம்மாதிரி ஊளை ஒன்றை கேட்ட ஒரு பெண் மயங்கி விழுந்தாராம். இதய நோய் காரார் இறந்த விட்டாராம் ஒருவரது காது செவிடாகி விட்டதாம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X