2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தாதியர் மன்றத்தில் தகுதியில்லாதவர்கள் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

1984 தொழிற்சங்க சட்ட ஏற்பாட்டின்படி அமைக்கப்பட்ட தாதியர் மன்றத்தின் அங்கத்தவர்களாக தகுதியில்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தாதியர்கள் தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

19 அங்கத்தவர்கள் கொண்ட தாதியர் மன்றத்திற்கு பொருத்தமில்லாதவர்கள் நியமிக்கப்படுவார்களாயின் இப்போதுள்ள நிலைமையே தொடர்ந்தும் காணப்படும் என அரசாங்க தாதியர் உத்தியோகத்தர் சங்கம் இன்று கூறியது.

தாதியர் மன்றத்தில் உத்தியோக பற்றற்ற 8 உறுப்பினர்கள் இருப்பர். ஏனைய 11 பேரும் தாதிய சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்படுவர்.

இந்த மன்றம் தாதிய தொழில் புரிவதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். தாதிய சமூகத்தின் ஒழுக்காற்று நடவடிக்கையிலும் இதற்கு அதிகாரம் உண்டு என அரசாங்க தாதியர் தொழிற்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

அரசாங்கம் தெரிவு செய்யும் தாதியர்களிலிருந்து 11 பேரை தாதியர்கள் தெரிவு செய்வர். இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் தாதியத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா தகைமையை கொண்டிருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் நியமித்த சிலருக்கு இந்த தகுதி இல்லை. தகுதியுள்ள பலரை அரசாங்கம் உதாசீனப்படுத்தியுள்ளதென சமன் ரத்னபிரிய கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X