2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கல்வி நவீனமயப்படுத்தப்பட வேண்டும்: சந்திரிகா

Suganthini Ratnam   / 2011 மார்ச் 30 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்வி முறைமை உடனடியாக நவீமயப்படுத்தப்பட வேண்டுமென்பதுடன், அது சமூக பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறதெனவும்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

'எல்லைக் கட்டுப்பாடுகளின்றிய கல்வி முறைமை எமக்குத் தெரிந்த பாரம்பரிய முறைமைக்கு அப்பால் சென்றுள்ளது.  ஒவ்வொருவரையும் சமூகவியல், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் உள்ளடக்குவது முக்கியமானது' என சந்திரிகா குமாரதுங்க கூறினார்.

துபாயில் நடைபெற்ற 'கல்வி உலகமயமாகிறது' எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலொன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.

கல்வி, கற்பிக்கும் முறைமையை நவீனமயப்படுத்துவதற்காக குறித்த கல்வி மறுசீரமைப்பு அண்மையில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  சமாதானத்திற்கான கல்வி போன்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மறுப்பதற்கு பதிலாக இதன் மூலம் பல்லினத்தன்மையை கொண்டாடமுடியும்.

இதேவேளை, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலுள்ள கிராமப்புற பாடசாலைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது அவசியமென்று கல்வித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். (DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X