2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்து ஆலயத்தை சுனாமி அகதிகள் முகாமாக காட்டிய பயண வழிகாட்டி

Super User   / 2011 ஏப்ரல் 04 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

களுத்துறையிலுள்ள இந்து ஆலயமொன்றுக்கு பிரித்தானிய உல்லாசப் பிரயாணியொருவரை  அழைத்துச் சென்ற உள்ளூர் உல்லாசப் பயண வழிகாட்டியொருவர் , அக்கோவிலில் சுனாமி அகதிகள் தங்கவைக்கப்பட்டிருப்பதாக பிரித்தானிய உல்லாச பயணியை   நம்பவைத்து அவர்களுக்கு உதவுவதெற்கென பணம் பெற்றமை அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் களுத்துறை பொலிஸார் சம்பந்தப்பட்ட கோவிலின் குருக்களிடம் வாக்குமூலமொன்றை பெற்றுள்ளனர்.

உல்லாசப் பயணிகளை பயண வழிகாட்டிகள் மதவழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று அத்தலங்களுக்கு உதவுவதற்கென பணம் பெற்ற பல சம்பவங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

களுத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமந்த வெதகே, குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உதவி இன்ஸ்பெக்டர் சுனெத் சாந்த ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(சுனில் தந்திரிஆரச்சி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .