2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புத்தாண்டின்போது விசேட போக்குவரத்து சேவை நடத்துமாறு அமைச்சர் ஆறுமுகன் கோரிக்கை

Super User   / 2011 ஏப்ரல் 04 , பி.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா)

புதுவருட பண்டிகைக்  காலத்தில் பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் பகுதிகளுக்கு விசேட போக்குவரத்து சேவைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளரும் கால்நடை அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் போக்குவரத்து அதிகாரிகளை கோரியுள்ளார்.

ஏப்ரல் 12 முதல் 18 ஆம் திகதிவரை விசேட பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகளை மேற்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

கொழும்பிலிருந்து கண்டி, ராகல, தலவாக்கலை, அக்கரபத்தனை, பொகவந்தலாவ, ஹட்டன், மஸ்கெலியா, பதுளை உட்பட பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் பகுதிகளுக்கு இவ்விசேட போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கோரியுள்ளதாக இ.தொ.கா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்கள் தமது கிராமங்களுக்கு செல்ல வசதியாக விசேட போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எம்.டி.பந்துசேன தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X