2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையுடனான எதிர்கால ஒத்துழைப்பு உரிமைகள் விவகாரத்தில் தங்கியுள்ளது: அமெரிக்கா

Super User   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இலங்கையுடனான எதிர்கால ஒத்துழைப்பு அதன் மனித உரிமைகள் நிலைவரம். மற்றும் யுத்தத்தின் இறுதியில் ஏற்பட்ட குருதிப் பெருக்கிற்கு பதிலளிப்பதில் தங்கியுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இராஜங்கச் செயலாளர் ரொபர்ட் பிளெக் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகார குழுவிடம் இதைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மனித உரிமைகள்  வரலாறு குறித்து கவலை கொள்கிறது. அது ஜனநாயக நிறுவனங்களையும் நடைமுறைகளையும் பலவீனப்படுத்துகிறது. தமிழ் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்; கடைசி மாதங்களில் அது நடந்துகொண்ட விதமானது எம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதை பாதிக்கிறது' என ரொபர்ட் பிளெக் கூறியுள்ளார்.

'அந்த நாட்டின் எதிர்கால சிவில் தன்மை மற்றும் சுபீட்சத்திற்கு நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்' எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X