2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அனைத்து இடம்பெயர் மக்களும் இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 22 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

இந்த வருட இறுதிக்குள் அனைத்து இடம்பெயர்ந்த மக்களையும் அரசாங்கம் மீள்குடியேற்றுமென மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கான விஜயமொன்றை மீள்குடியேற்ற அமைச்சர் மேற்கொண்ட வேளையிலேயே இதனைக் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை இந்த வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

243,787 மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். கதிர்காமர் நலன்புரி கிராமத்தில் 7156 இடம்பெயர் மக்களும் ஆனந்த குமாரசுவாமி நலன்புரி கிராமத்தில் 9132 இடம்பெயர் மக்களும் இன்னமும் உள்ளனர். இவர்கள் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் ஏற்கெனவே மீள்குடியேற்றப்பட்டுள்ளனரெனவும் அவர் கூறினார்.  

கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கை காரணமாகவே மீள்குடியேற்றம் தாமதமடைவதாக தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சர், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட முன்னர் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டுமெனவும்  குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X