2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

Super User   / 2011 ஜூன் 24 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மில்லியனர்களின் (கோடீஸ்வரர்களின்) எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் 10 ஆசிய நாடுகளில் இலங்கை 6 ஆவது இடத்தில் உள்ளது.

ஹொங்கொங், வியட்நாம் ஆகியன இதில் முதலிடத்தில் உள்ளன. அந்நாடுகளில் 33 சதவீத வருடாந்த அதிகரிப்பு காணப்படுவதாக அமெரிக்க வங்கியின் செல்வ வள முகாமைத்துவப் பிரிவான 'மெரில் லின்ச்', அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஹொங்கொங், வியட்நாமுக்கு அடுத்ததாக இந்தோனேஷியா, சிங்கப்பூர், இந்தியா ஆகியன உள்ளன.  இவற்றுக்கு அடுத்த இடத்தில் இலங்கை உள்ளது.

கடந்த வருடம் முதல் தடவையாக ஐரோப்பாவைவிட ஆசியாவில் அதிக எண்ணிக்கையான மில்லியனர்கள் இருந்ததாக மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கடந்த வருடம் ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் சொத்துக்களைக்கொண்ட (அவர்களின் வீடுகள் நீங்கலாக) மக்களின் எண்ணிக்கை 3.3 மில்லியனாக இருந்தது. இது முந்தைய வருடத்தைவிட 10 சதவீதம் அதிகமாகும். 

இதன்படி 3.1 மில்லியன்; மில்லியனர்களைக் கொண்ட ஐரோப்பாவை ஆசியா முந்தியுள்ளது.வட அமெரிக்கா இதில் முதலிடம் வகிக்கிறது. அங்கு செல்வந்தகர்களின் எண்ணிக்கை 8.6 சதவீதத்தால் அதிகரித்து 3.4 மில்லியனாக உயர்ந்துள்ளது.

விரைவில் வட அமெரிக்காவை ஆசியா முந்திவிடும் என மெரில் லின்ச் நறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர்களில் ஒருவரனான வில்சன் ஸோ கூறியுள்ளார்.

இதேவேளை உலகிலுள்ள ஒருகோடியே 10.9 மில்லியன் மில்லியனர்களில் அரைவாசிப் பேர் அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி ஆகிய 3 நாடுகளில் வசிக்கின்றனர்.
 


You May Also Like

  Comments - 0

  • Nesan Saturday, 25 June 2011 01:36 AM

    ஊழல் , தூள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தில்....

    Reply : 0       0

    goodheart Saturday, 25 June 2011 04:20 PM

    நிச்சயமாக அது ஒரு அரசியல்வாதியகத்தான் இருக்க முடியும், எங்கே எங்கள் நாட்டு பொதுமக்கள் கோடிஸ்வரராக மாறுவது!!! அது வெறும் பகல் கனவு, கோடிஸ்வரர்களைக் கணக்கிடுகிறீர்கள், எங்கே உங்கள் கணக்கு ஏழைகளுக்கு!! அதிலும் நிச்சயமாக நம்ம நாடு பத்து நாடுகளின் பட்டியலில் இடம்பெறும்.

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Saturday, 25 June 2011 09:10 PM

    தகவல் சுதந்திரம்: பெயர் முகவரி வழங்க இயலுமா?

    Reply : 0       0

    ameer Saturday, 25 June 2011 09:46 PM

    அரசியல்வாதிகள் தான் இதில் இருப்பார்கள்.
    நேர்மையாக உழைத்தால் ஒருநாளும் கோடீஸ்வரர் என்ன
    சாதாரண பணக்காரர் ஆகவும் முடியாது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .