2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பொலிஸ் என எதுவுமில்லை: பிளெக்கின் கருத்துக்கு பிரதியமைச்சர் முரள

Super User   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் சிங்கள பொலிஸ், தமிழ் பொலிஸ், முஸ்லிம் பொலிஸ் எதுவுமில்லை எனவும் இலங்கை  பொலிஸார் மாத்திரமே உள்ளனர் எனவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.

வடக்கில் தமிழ் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் கூறியமை தொடர்பாக கருத்து கேட்டபோதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • Sara Wednesday, 14 September 2011 06:54 PM

    இன்னும்..இன்னும்... உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கின்றோம்.

    மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட 600 பொலிஸ், தமிழா, சிங்களமா அல்லது முஸ்லீமா என கேட்கப்படாது.

    Reply : 0       0

    karan Wednesday, 14 September 2011 07:07 PM

    இப்பவே கண்ணை கட்டுது

    Reply : 0       0

    Hot water Wednesday, 14 September 2011 07:08 PM

    இனங்களுக்கு தனித்தனியா பொலிஸ் திணைக்களங்கள் இல்லைதான். ஆனால் 1990 ஜுன் மாதம் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் சரணடைந்த பொலிஸாரில் சிலர் தனிதனியா பிரித்து விடுவிக்கப்பட்டார்களே அவர்கள்தான் தமிழ் பொலிஸ். அவர்களில் தெரிவுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோர் சுட்டுக்கொல்லப்பட்டார்களே அவர்கள்தான் சிங்கள பொலிஸ். இப்ப விளங்கீட்டா இல்ல, இன்னும் விளக்கணுமா?

    Reply : 0       0

    aj Wednesday, 14 September 2011 07:20 PM

    இது கருணா ஒரு அரசியல் "டக்கு" என்று தெளிவாக காட்டுகிறது . நான் நினைக்கிறேன் கருணா திரு. பிளேக் அவர்களின் அறிக்கையை வாசிக்கவில்லை. முதலில் விடயத்தை வாசித்து புரிந்துகொண்ட பதில் சொல்லவேண்டும். இது ஆசிய அதிசியம் லங்காவில் எப்போதுமே இல்லை . எடுத்த உடனே இல்லை, மறுப்பு, பொய், போலி என்று பேசுவது இவர்களுக்கு ஒன்றும் புதிது அல்ல.
    திரு. பிளேக் அவர்கள் சொன்னது வடக்கில் தமிழர்கள் போலீஸ் சேவைக்கு உள்வாங்க வேண்டும் என்றே தவிர அவர் தமிழ் போலீஸ், சிங்கள போலீஸ் , முஸ்லிம் போலீஸ் என்று சொல்லவில்லை அல்ல. அங்கு வசிப்பவர்களின் 98 % தமிழர். மொழி, தொடர்பாடல் மற்றும் எல்லா விடையத்தையும் கருத்தில் கொண்டே அவர் "தமிழர்களும்" போலீஸ் சேவைக்கு உள்வாங்க வேண்டும் என்று சொன்னார். எதுக்கோ முந்திய அது மாதிரி இவர் முந்திக்கொண்டு தன்னுடைய அமெரிக்கா மீதான கோபத்தை காட்டுகிறார் திரு. பிளேக் சொன்னது நல்ல விடையம். இதில் இருக்கும் உண்மையை, ஒரு தொலை நோக்கு கொண்ட நல்லிணக்கம் தொடர்பான விடையத்தை புரிந்துகொள்ள வேண்டும். இவர்களுக்கு ஒரு தொலை நோக்கு இல்லை. இது எல்லோரும் அறிந்த உண்மை. இவர்களுக்கு தேவை ஒரு அடக்கு முறை. மக்கள் நலன் கருதி செயல்படுவதை விட இவர்களின் நலனே இவர்களுக்கு பெரிது. ஆனால் இவர்களை எப்போதுமே உலகம் சரி தமிழரும் சரி ஒரு பொருட்டே செய்தது இல்லை. நேற்று டக் எதோ செய்து வாங்கிகட்டிகொண்ட மாதிரி இன்று இவர். டக் செய்தது ஒரு வகையில் நல்லது . அங்கு நடப்பது ராணுவ ஆட்சி , ராணுவ துணை படைகள் அட்டகாசம். மக்கள் சுதந்திரம் இல்லாமல் ஒரு இருண்ட ராணுவ பிடிக்கு இருக்கிறார்கள். இதை டக் நேற்று மீண்டும் உலகிக்கு தெரிவித்து இருக்கிறார்.

    Reply : 0       0

    Maheswaran Thilipan Wednesday, 14 September 2011 07:34 PM

    நீங்க தமிழ் அமைச்சரா? முஸ்லிம் அமைச்சரா? அல்லது சிங்கள அமைச்சரா?
    யோசித்து சொல்லுங்க. இலங்கை அமைச்சர் தானே.

    Reply : 0       0

    Uva Wednesday, 14 September 2011 08:57 PM

    மலையை பார்த்து நாய் குரைத்த்தால்...

    Reply : 0       0

    Jakkoo Wednesday, 14 September 2011 09:36 PM

    ஆங்கிலம் கற்பிக்க வேண்டும், English as a Life Skill program.

    Reply : 0       0

    xlntgson Wednesday, 14 September 2011 09:47 PM

    இந்தியாவில் கூட இப்பிரச்சினை உண்டு- இன மத வகுப்பு வாத கலகங்களை மாநில போலீஸ் சரிவர கையாளவில்லை என்று-உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை திருத்தப்பார்க்கிறது என்றும், போலீஸ் அதிகாரங்களில் கைவைக்கப் பார்க்கிறது என்றும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் பெரும் கூச்சல். இதற்கு தான் இங்கே பயப்படுகிறார்கள்-கொடுத்தால் திருப்பி எடுக்க இயலாமற் போய்விடும் என்று, ஆனால் கொடுத்துப் பார்க்க வேண்டும் இல்லாவிட்டால் கோரிக்கை இருந்து கொண்டுதான் இருக்கும்.
    என்ன தான் செய்து விட இயலும்-இராணுவச் சட்டம் கையில் இருக்கும் போது!

    Reply : 0       0

    KLM Wednesday, 14 September 2011 11:20 PM

    எட்டு வருசத்துக்கு முன் இதை மற்றவர்கள் சொல்லியிருந்தால் துரோகி என்று கூறியிருப்பீர்கள்.

    Reply : 0       0

    rakkish.. Thursday, 15 September 2011 01:21 AM

    சபாஷ்.. சிறுபான்மை என்று இல்லை- ஜனாதிபதி ... இது இவக... யாரை குற்றம் சொல்வது??????

    Reply : 0       0

    hhh Thursday, 15 September 2011 03:29 AM

    கருணா மீதுள்ள சொந்த கோபாத்தின் வெளிப்பாடுதான் எல்லா கம்மேன்ட்சும் .......

    Reply : 0       0

    ruban Thursday, 15 September 2011 04:59 AM

    அறிக்கை விடுவதற்கும் ஒரு தகுதி வேணும் ,நடந்து வந்த பாதையை திரும்பி பாக்கணும்.

    Reply : 0       0

    Mark Wilson Thursday, 15 September 2011 07:31 PM

    அன்று aj கருணாவுக்கு ஆதரவு..... இன்று... எதிர்ப்பு....!!! என்ன வாழ்கடா.... இது.......

    Reply : 0       0

    THIVAAN Friday, 16 September 2011 01:26 AM

    தமிழர்கள் கருணாவுக்கோ, பிரபாவுக்கோ ஆதரித்து நிக்கவில்லை. அவர்கள் தமிழர்களுடய உரிமையைதான் ஆதரித்தார்கள். அது ஒரு சிங்களவராக இருந்தாலும் என்ன அமரிக்கராக இருந்தால் என்ன .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .