2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

25 ஐ.தே.க எம்பிக்கள் சுயாதீனக் குழுவாக செயற்படுவர்:தயாசிறி ஜயசேகர

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்சித் தலைமைத்துவ பிரச்சினை குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சி அவசர கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.

  அதேவேளை, கட்சிப் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் 25 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனக் குழுவாக அமர்ந்து  செயற்படுவார்கள் என ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

தமது கட்சியின் பிரச்சினைகள் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதாகவும், எதிர்வரும் வாரத்தில் இதற்கான தீர்வு காணப்படாவிட்டால், இக்குழுவினர் நாடாளுமன்றத்தில் சுயதீனமாகச் செயற்படவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

கட்சித் தலைமைத்துவ பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனக் கோரும் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்  மற்றும் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெறவுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், கட்சியின் எதிர்காலம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் கூறினார்.

கட்சித் தலைமைத்துவம் உட்பட்டதான கட்சி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் முகமாக அவசர கூட்டமொன்றை நடத்துமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்தனர்.

அன்றைய தினம் மாலையே மேற்படி கூட்டத்தை நடத்த வேண்டும் என ஐ.தே.க எம்பிக்கள் கோரினர். எனினும் அதை நிராகரித்த ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வாரம் இக்கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

கட்சியின் சிரேஷ்ட தலைவர் பதவியொன்றை உருவாக்கி ரணில் விக்கிரமசிங்காவை அதற்கு நியமிப்பதன் மூலம் தலைமைத்துவப் பிரச்சினையை தீர்க்க முடியும் என ஐ.தே.க அங்கத்தவர்கள் கருதுகின்றனர்.

சஜீத் பிரேமதாஸ புதிய தலைவராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் கரு ஜயசூரிய தொடர்ந்தும் பிரதித் தலைவராக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


 



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .