2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’’போலிகளைக் கேட்டு ஏமாறாதீர்கள்” ஊடகவியலாளர்களே அவதானம்!

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

றம்ஸி குத்தூஸ்

இன்று ஊடகத்துறை மிகவும் வளர்ச்சியடைந்துகொண்டு போவதைக் காணக்கூடியதாக உள்ளது.சமூக வலைத் தளங்களான பேஸ்புக்,வட்ஸ்அப்,டுவிட்டர் 

போன்ற பலதளங்களைக் காணலாம். அதேபோல், ஒரு சிலர் சமூக வலைத் தளங்களை வைத்துக் கொண்டு ‘ஊடகவியலாளர்கள்’ என்று மார்தட்டுகின்றனர்.

ஆனால், இவர்களில் சிலருக்கு ஊடக ஒழுக்ககோவை பற்றிய எந்தவொரு தகவலும்

தெரியாது. இதேவேளை, ஊடக நிறுவனங்களோ ஊடகவியலாளர்களோ மக்களுக்குச் சரியான தகவல்களை வழங்குவது மிகவும் முக்கியமான விடயமாகும்.  

கொழும்பு கலதாரி ஹோட்டலில் ‘REAL MEDIA LITERACY FOR A FAKE NEWS’ (போலிச்

செய்திகள்) தொடர்பான செயலமர்வு SDJF, CMIL ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் வளவாளராக ஜெஸி ஹோலிஸ் மெக்காத்தி கலந்துகொண்டார். 

இச் செயலமர்வில் வளவாளர் ஜெஸி ஹோலிஸ் மெக்காத்தி ஊடகம் பற்றி நெறிப்படுத்தினார். ஊடகவியலாளர் பணியானது மிகவும் கடினமானது. ஆனால், இப்பணியைப் பொறுப்புடன் செய்ய வேண்டிய பொறுப்பு, ஊடகவியலாளர்களுக்கு

உண்டு. அதாவது ஒருவருடைய கருத்தைத் திருத்திக் கூறக் கூடாது. அதாவது இவர் இவ்வாறுதான் கூறினார்,என்றால் அதனை அவ்வாறே பிரசுரிக்க வேண்டும். 

குறிப்பாக, ஊடகவியலாளன் பக்கசார்பற்றவனாகச் செயற்படுவது தான் (சரியான)

முறையான ஊடகவியலாளன். இதைவிட ஓர் ஊடகவியலாளன் சுயநலம், ஓரவஞ்சனையான செயற்பாடுகள், மற்றவர்களை தொடர்பில்லாமல்

தொடர்புபடுத்தல் போன்றவற்றிலிருந்து தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

குழப்பகரமான விடயங்கைளை முறையாகக் கையாண்டு, செயற்பட வேண்டும். அந்தரங்கங்களை எவ்வாறு கையாள வேண்டுமென்பதை அதற்கேற்றாப்போல் செயற்படவேண்டும்.  

ஓர் ஊடகவியலாளன் நம்பிக்கையை மய்யமாக வைத்துச்

செயற்படவேண்டும்.அதனால் தான் அந்த ஊடகத்தின் மீது, மற்றவர்களும் நம்பிக்கையைப் பெறுவார்கள். 

ஊடகவியலாளனிடம் இருக்கவேண்டியவை;

# துல்லியமாக

# நியாயமாக

# தெளிவாக

ஊடகவியலாளன் ஒருவிடயத்தை மிகவும் துல்லியமாக ஆராய்ந்து, செய்தியை வெளியிட வேண்டும். இதேவேளை, நியாயமாக அதாவது, குறித்த செய்தியில்

உங்கள் மீதான தாக்கம் ஒன்றைக் கொண்டிருக்கும் போது, யாருக்கும் சாதகம் மற்றும் பாதகமில்லாமல் செயற்பட வேண்டும். தெளிவாக விடயங்களை எடுத்துச் சொல்லவேண்டும்.

அதாவது, முரண்பட்ட கருத்துகளின் அடிப்படையில் செய்தியொன்றை ஒன்றாகச் சேர்க்க முயற்சிக்கும் போது, தெளிவாக அதனைச் செயற்பட வேண்டும். 

அதாவது, முரண்பட்ட கருத்துகளின் அடிப்படையில் செய்தியொன்றை ஒன்றாகச் சேர்க்க முயற்சிக்கும் போது தெளிவாக அதனை செயற்பட வேண்டும். 

ஊடகவியலாளன் ஒருவிடயத்தை மிகவும் துல்லியமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட வேண்டும். இதேவேளை, நியாயமாக அதாவது, குறித்த செய்தியில்

உங்கள் மீதான தாக்கம் ஒன்றைக் கொண்டிருக்கும் போது, யாருக்கும் சாதகம் மற்றும் பாதகமில்லாமல் செயற்பட வேண்டும். தெளிவாக விடயங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அதாவது, முரண்பட்ட கருத்துகளின் அடிப்படையில்

செய்தியொன்றை ஒன்றாகச் சேர்க்க முயற்சிக்கும் போது, தெளிவாக அதனை செயற்பட வேண்டும்.  அதாவது ஒரு நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில்

முக்கியமாக இருக்கவேண்டியவரின் உருவத்தை இல்லாமல் செய்து விட்டு, அந்தப்படத்தை பிரசுரம் செய்தல்.

இதேவாறான நிகழ்வொன்று இலங்கையில் நடந்த உண்மையான சம்பவம்;

அதாவது, மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வர் ஒருநூலை எழுதிப்பிரசுரம் செய்தார். அது,  மர்ஹும்  எம்.சி.எம் கலீலுடன் சம்பந்தப்பட்டது.அந்தப்படத்தில் அன்றைய

அமைச்சர்களுடன் நடுவில் புத்தக ஆசிரியர் ஏ.ஏச்.எம் அஸ்வரும் காணப்படுகிறார். ஆனால், இலங்கையிலுள்ள பிரதான பத்திரிகைளில் முழுப்படமும் பிரசுரமானது.

ஆனால், ஒரேயொரு பத்திரிகையில் நடுவில் நின்ற  ஏ.ஏச்.எம் அஸ்வர் இல்லை. இவ்வாறான நிகழ்வுகளும் இடம் பெற்றுத்தான் உள்ளன.

எனவே, போலிச் செய்திகள் குறித்து ஊடகவியலாளர்கள் மிகவும் அவதானமாகச்

செயற்பட வேண்டும். சிலர் தங்களது பிரபல்யங்களை அறிமுகப்படுத்துவதற்கு சில

செயற்பாடுகளைச் செய்கின்றனர். அவை ஊடகத்துறையினருக்கு இழுக்கை மட்டுமல்ல வாசகர்களின் நம்பகத் தன்மையையும் இல்லாமல் செய்யும்.

ஊடகவியலாளன் பொதுவாக சகல விடயங்களிலும் ஒரளவேணும் பாண்டித்தியம் பெறாவிட்டாலும் குறித்த விடயத்தை முறையாக கையாளவேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .