2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இரத்த உறைவுடன் ஏற்படின் சிசிச்சையளிப்பது கடினம்’

Niroshini   / 2021 மே 10 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்- 19க்கான தடுப்பூசிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் தரம் வாய்ந்தவை என தெரிவித்துள்ளது

இது தொடர்பில் கருத்துரைத்த சங்கத்தின் நிரவாக உறுப்பினர் வைத்தியர் பிரசாத், “நாட்டிலுள்ள அனைத்து பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கும், கூடிய விரைவில் தடுப்பூசிகள் சென்றடைய வேண்டும்” என்றார்.

“தற்போதைய வைராஸானது நுரையீரலை கடுமையாக பாதிப்படையச் செய்து நியூமோனியாவை ஏற்படுத்திவிடும். சாதாரண நியுமோனியாவை விடவும் இது கடினமானது” என்றார்.

இந்த நியுமோனியா, இரத்த உறைவுடன் ஏற்படலாமெனத் தெரிவித்த அவர், இவ்வாறானச் சந்தர்ப்பங்களில் சிகிச்சை அளிப்பது வைத்தியர்களுக்கு சிரமம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், ஒட்சீசன், அதிதீவிர சிகிச்சைகளுக்கான தேவைகள் பன்மடங்காக அதிகரிக்கும் என்றார்.

இக்கட்டான இந்த நிலைமையை, ஒவ்வொரு பிரஜையும் புரிந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்த அவர், இதனை சாதாரணமாகக் கருதிவிட வேண்டாமென அறிவுறுத்தினார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை தொடர்பில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை வைத்தியர்கள் சங்கம், வெளிநாட்டு வைத்தியர்கள் சங்கம் ஆகியன இணைந்து, ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.  இவை  மிகவும் விலைமதிப்பற்ற மணிநேரங்கள். சரியான முடிவுகளை எடுப்பது முக்கியம். மக்கள் இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு, பழங்களை உட்கொள்ளுதல் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .