2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கையில் புதிய வைரஸ்; முகக்கவசம் அணிவது கட்டாயம்

Freelancer   / 2022 நவம்பர் 24 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனாவுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இந்நோய், ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது.

எனவே சரியான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது மற்றும் முகக்கவசம் அணிவது அவசியமானது என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் வலியுறுத்தியுள்ளார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X