2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கையிலும் புதிய கொரோனா மாத்திரை

Freelancer   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொவிட் 19' ஐ கட்டுப்படுத்துவதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் 'மோல்னுபிரேவிர்' என்ற மாத்திரையை இலங்கையில் பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்க மருந்து நிறுவனமான 'மெர்க்'  தயாரிக்கும் இந்த மாத்திரையின் பயன்பாட்டில் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கவனம் செலுத்துகின்றன.

இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் நிபுணர் குழுவின் கருத்துக்களைப் பெற சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X