2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ஏன் இணைத்தோம் ?’

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நதீக தயாபண்டார

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் எவ்விதமான பாராபட்சமும் இன்றி, அரசியலமைப்புடன் முழுமையாக இணங்கும் வகையில் உள்ள​தென சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா அறிவித்துள்ளதாகத் தெரிவித்த, வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அதனால்தான் அதனை ஒழுங்குப்பத்திரத்தில் இணைத்து, பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் தயாரானது என்றார்.

கண்டியில் நேற்று (18)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

இந்த துறைமுக நகரத்துக்கு கறுப்பு பணத்தை கொண்டு வரலாம் என்றும் அமெரிக்கத் தூதுவர் இன்னுமொரு தடவை துறைமுக நகரத்தில் முதலீடு செய்யவுள்ளாரென போன்ற முரண்பாடான கருத்துகள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், துறைமுக நகர சட்டமூலம் அரசியலமைப்புக்கு அமைவானதென்றும் அதில் சட்டப் பிழைகள் இல்லையென்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாகவும் ​குறிப்பிட்டார்.

விடுமுறை தினத்தில் இச்சட்டமூலத்தை கொண்டு வருவதன் ஊடாக இதற்கு எதிராக நீதிமன்றம் செல்லும் சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றம் சுமத்துவதாகத் தெரிவித்த அவர், குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ள 21 மனுக்கள் மூலம் இச்சட்டமூலம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்ல முடியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டின் முதலீட்டு பிரதேசம் மாகாண சபைகளுக்கு உரித்துடையதாக அமையாது. இது தொடர்பான சட்டத்தை ஜேஆர்.ஜயவர்தன கொண்டு வந்த போது அமைதியாக இருந்தவர்களே இன்று கடல் மணலால் நிரப்பப்பட்டு, புதிதாக அமைக்கப்படடுள்ள வலயத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்றார்.

எதிர்கால அரசியல் பயணமில்லை என்பதை அறிந்துகொண்ட சில மேற்கத்தையே மற்றும் இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் இந்த ​வேலைத்திட்டத்தை முடக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் கெஹலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .