2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தவறை ஒப்புகொண்டது கூட்டமைப்பு

Freelancer   / 2021 நவம்பர் 25 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்  

நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என, அந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்த தாமும் கோரவில்லை என தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இந்தத் தவறை பகிரங்கமாக ஏற்றுகொள்கிறோம் எனவும் அறிவித்தார்.   

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று (24) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

 “வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தேர்தல் திருத்தம் வரும்வரை அல்லது அரசியலமைப்பில் திருத்தம் வரும்வரை மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது என கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  

“நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படவில்லை. அந்த அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்துவந்த நாமும் அதனை வலியுறுத்தவில்லை என்பதை பகிரங்கமாக ஏற்றுகொள்கிறேன். இந்த தவறை ஏற்றுகொள்கிறோம்.  

நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறை இந்த அரசாங்கமும் செய்யப்போகிறதா? ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இரு வருடங்களும், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு வருடங்களும் கடந்துள்ளன. 

இவ்வாறான நிலையில் கடந்த அரசாங்கம் செய்த தவறை விடுத்து மாகாணசபை தேர்தலை இந்த அரசாங்கம் நடத்த முன்வர வேண்டும்“ என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .