2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’பழிவாங்களுக்காகவே சந்திரகாந்தனை சிறையிட்டனர்’

Editorial   / 2020 பெப்ரவரி 29 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறையிடுவதை மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் செய்ததென தெரிவிக்கும்  என ஜனசென பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்தின தேரர், சந்திரகாந்தனின் கைது அரசியல் பழிவாங்கள் என்றும் சாடினார்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு ஜனசென பெரமுனை கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்தின தேரா் நேற்று (28) மாலை சென்று முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை  சந்தித்த பின் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், 

நாட்டின் சகல இன மக்களும் இணைந்து விடுவித்த போதே ஒற்றுமை நிலைமை காணப்பட்டதெனவும்,புதிய அரசாங்கத்திலாவது பிள்ளையான் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.     

அத்தோடு, குறித்த வழக்கு விசாரணைகளை விரைவாக நிறைவு செய்து உரிய தீர்ப்பை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள அவர்,  நாட்டின் ஒற்றுமை நிலைக்க வேண்டுமெனில் சகல இனத்தவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .