2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பி அறிக்கையை வாபஸ் பெற அனுமதி

Freelancer   / 2023 ஜனவரி 24 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  பி அறிக்கையை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் செவ்வாய்கிழமை (24)  அனுமதி வழங்கினார்.

கொழும்பு மேலதிக நீதவான் தரங்கா மஹவத்த மீது சட்ட மா அதிபர் திணைக்களம் தேவையற்ற அழுத்தங்களை பிரயோகித்ததாக கூறி சட்டத்தரணிகள் குழுவொன்று கடந்த 18ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, நுவான் போபகே மற்றும் சேனக பெரேரா
உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு தேர்தல் சட்டங்கள் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தின் விதிகளை
மீறி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக வாழைத்தோட்டம் பொலிஸார் பி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த அறிக்கையை பரிசீலித்த பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

நேற்றையதினம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேலதிக நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமல் அறிக்கையை மீளப் பெறுவதற்கு அனுமதி கோருவதாக வாழைத்தோட்டம் பொலிஸார், மன்றுக்கு அறிவித்ததையடுத்து நீதவான் அனுமதி வழங்கினார்.

இதேவேளை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பி அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டமை குறித்து விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன பணிப்புரை விடுத்திருந்தார்.

பொலிஸ்மா அதிபர் அல்லது பொலிஸ் தலைமையகத்தின் சட்டப் பிரிவுக்கு தெரியாமல் பி
அறிக்கை தாக்கல் செய்தமை குறித்து மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிடமே அறிக்கை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .