2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விசாரணைகள் இன்னும் முடியவில்லை

Freelancer   / 2022 ஜனவரி 15 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, நேற்று (14) தெரிவித்தார்.

இதில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் தரம் பாராமல் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விசாரணைகள் முடிவடைந்தவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் நேற்று வெளியிட்ட விசேட அறிக்கையொன்றிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்களை பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள் சட்டத்துக்கு உட்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினரால் இதுவரை 14 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் உதவிகள் விசாரணைகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் மற்றும் கைக்குண்டு வைப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் விரைவில் கண்டறியப்படும் என்று கூறிய அவர், இந்த நடவடிக்கை சதித்திட்டத்தின் ஒரு பகுதியா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறினார்.

விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அண்மையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டுக்கு நிகரான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .