2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வார இறுதிக்கான அதிரடி அறிவிப்பு வெளியானது (மேலதிக இணைப்பு)

Editorial   / 2021 ஜூலை 21 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வார இறுதியில் நீண்ட விடுமுறை இருந்தாலும் பயணக் கட்டுபாடுகளை விதிப்பதற்கு எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என, கொவிட-19 தொற்று வியாபிப்பதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்கள் 20 ஆயிரம் பேர், சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நாளொன்கு தொற்றாளர்கள் 1,500 பேர் இனங்காணப்படுகின்றனர் எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, இந்த நிலைமையின் கீழ் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வரையறுக்கப்பட்ட சில பகுதிகளும் பிரதேசங்கள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளன. அத்துடன் தடுப்பூசியை ஏற்றும் செயற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .