2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, தடை விதிக்கப்பட்டிருக்கும் 11 இஸ்லாமிய அமைப்புகளுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்வதை தவிர்த்துகொள்ளுமாறு - வை.எம்.எம்.ஏ. தேசியத்தலைவர் சஹீட் எம். ரிஸ்மி விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட அமைப்புகள் அல்லது அவ்வமைப்புகளின் உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வதையும் தவிர்த்துகொள்ளுமாறு, வை.எம்.எம்.ஏ. உறுப்பினர்களுக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.

அல்லது அவர்களது உறுப்பினர்களுடனோ தொடர்பு கொள்வதைத் தவிர்ந்து கொள்ளுமாறு, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, அனைத்து வை.எம்.எம்.ஏ. உறுப்பினர்களிடமும் விசேட அறிவித்தல் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

   வை.எம்.எம்.ஏ. பேரவையின் நம்பிக்கைப்  பொறுப்பாளர்,  சபை உறுப்பினர்கள்,  செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சகல அங்கத்துவ  உறுப்பினர்களிடமும் தேசியத் தலைவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். 

 

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் இணைந்திருந்தால் அல்லது ஏதேனும் தொடர்புகளை வைத்திருந்தால், வை.எம்.எம்.ஏ. எந்தப் பொறுப்பையும் ஏற்காது.

   அனைத்து உறுப்பினர்களும் 1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தின் கீழ், ஒரு தன்னார்வ சமூக சேவை அமைப்பாக, பிரதேச செயலாளர்  அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு எதிர்பார்க்கப்படுகிறது.

   

மேலும், பின்வரும் விடயங்கள்  கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படுகின்றன என்பதையும் உறுதிப்படுத்தவும்:

அ) கூட்டங்களின் சரியான அறிக்கைகளைப் பராமரித்தல்;

ஆ) தற்போதைய தொடர்புத் தகவலுடன் உறுப்பினர்களின் புதுப்பிக்கப்பட்ட பதிவுகளைப் பராமரித்தல்;

இ) வருமானம் மற்றும் செலவுகளின் முழு மற்றும் முழுமையான பதிவுகளைப் பராமரித்தல் அத்துடன்  கணக்காய்வு அறிக்கைகளைப் பேணுதல்;

அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. க்களுக்கு வெளிநாட்டு நிதியை நேரடியாகப் பெறவோ அல்லது பொது அறிக்கைகளை வெளியிடவோ அங்கிகாரம் இல்லை.

   ஏற்கெனவே செய்யாவிட்டால், மேற்கண்ட நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .