2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

2.45க்கு தகவல் வழங்கிய பெண்ணுக்கு விளக்கமறியல்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் அவசரப் பிரிவின் 119 என்ற இலக்கத்துக்கு அழைத்து போலி தகவல்களை வழங்கிய பெண்கள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக, வாகனமொன்றில் வெடிப்பொருள்கள் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்து நேற்று முன்தினம் (18) பகல்  2.45 மணியளவில் 119 என்ற இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தங்கொட்டுவ பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய, தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 25  பெண்ணொருவர், தனது  28 வயதுடைய ச​கோதரியிடம் அலைபேசியைப் பெற்று,  குறித்த போலி தகவல் வழங்கியுள்ளமையை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த 2 பெண்களும் கைதுசெய்யப்பட்டு, மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, தகவல் வழங்கிய பெண்ணை 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் அலைபேசியை வழங்கிய பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .