2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Niroshini   / 2021 மே 17 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக, ஆறுகள், நீர் நிலைகளின் நீர் மட்டங்கள் அதிகரித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விசேடமாக, களனி கங்கை, களு கங்கை, நில்வலா கங்கை போன்றவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. நில்வலா கங்கை பெருக்கெடுப்பினால், பத்தேகம பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மில்லாகந்த பிரதேசத்தினூடாக களு கங்கை பெருக்கெடுத்ததால், களுத்துறை மாவட்டத்துக்கு உட்பட்ட சில பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தனுகல்ல ஓயா மற்றும் மஹா ஓயா போன்றவற்றின் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளதால், அதனைத் சுற்றியுள்ள பகுதிகளிலும், சிறு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இம்மாதம் 13ஆம் திகதி முதல் நாட்டில் காணப்படும் அசாதாரண வானிலை காரணமாக, 7 மாவட்டங்களைச் சேர்ந்த 61 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதனால் நான்கு மரணங்கள் இதுவரையில் பதிவாகியுள்ளன என்றும் இருவர் காயமடைந்துள்ளனர் என்றும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்த வானிலை மாற்றம் காரணமாக, 11,074 குடும்பங்களைச் சேர்ந்த 42,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 205 குடும்பங்களைச் சேரந்த 853 பேர், பாதுகாப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த வானிலை மாற்றத்தால், 6 மாவட்டங்களுக்கு மணிசரிவு அபாயம் காணப்படுகிறது என்றும் அந்த வகையில், கொழும்பு, களுத்துறை, மாத்தறை, காலி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வானிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மாவட்டச் செயலகங்கள் ஊடாக நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X