2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'கைதிகளின் எதிர்கால வாழ்வுக்கு உதவ வேண்டும்'

Niroshini   / 2015 நவம்பர் 18 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

விடுதலையாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நாளைய உலகம் என்னாகுமோ என்ற கேள்விக்குறியில் உள்ளனர்.எனவே, எதிர்கால வாழ்வுக்கு உதவ வேண்டும் என ரெலோவின் நிர்வாகச் செயலாளரும் திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தருமான நித்திமாஸ்டர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர்கள் பிணையில் வெளியில் வந்துள்ளதால் இனி வரும் காலங்களில் வழக்கு விசாரணைகளையும் பல்வேறு சிரமங்களையும் சந்திக்க வேண்டிய சூழ் நிலையில் உள்ளனர்.மேலும், பெரும்பாலும் இவர்களது வயது நாற்பதை கடந்த நிலையில் இவர்கள் சமூகத்துடன் தங்கள் குடும்பத்துடன் இணைந்து செயற்பட பொருளாதார உதவி இன்றியமையாதது ஆகும்.

எனவே, விடுதலையான இவ்வாறான எமது உறவுகளுக்கு தனியார் நிறுவனங்களிலும் அரசாங்கத் திணைக்களங்களிலும் தொழில் வாய்ப்புகள் வழங்க எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.மாகாண அமைச்சர்கள்முன்வர வேண்டும்.அத்துடன் இவர்களின் எதிர்கால வழக்கு விசாரணைகளுக்கு தேவையான செலவுகளையும் மற்றும் இவர்களின் பிள்ளைகளின் கல்விக்கான செலவுகளையும் புலம் பெயர் தமிழ் அமைப்புகளும் பொறுப்பேற்று அவர்களின் சுமையை குறைக்க உதவ வேண்டும்.

எனவே, புனர்வாழ்வு அடிப்படையில் சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின்னரே இவர்களுக்காக வடக்கு, கிழக்கு மக்கள் நடத்திய சாத்வீக போராட்டம் வெற்றி பெற்றதாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .