2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் தமிழ் இலக்கிய விழா ஆரம்பம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் தமிழ் இலக்கிய விழா இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பண்பாட்டு பவனியுடன் ஆரம்பமாகியது. திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் முன்றலில் இருந்து பவனி புறப்பட்டது.

தமிழ் இன்னிசை அணியினர் முன்னே செல்ல அறிஞர்கள், பேராளர்கள் தொடர்ந்து வந்தனர். தமிழ் அறிஞர்கள் வேடம் புனைந்த பாடசாலை மாணவர்கள் அணியும் இதில் பங்கேற்றனர்.

பாடசாலை மாணவர்களின் கலாசார பவனியும் இடம்பெற்றது. காவடி, கும்பம், கோலாட்டம், கும்மி, நடனம் என்பனவும் இவ் ஊர்வலத்தில் இணைந்து கொண்டன.

அலங்கரிக்கப்பட்ட 'தமிழ் அன்னை' வாகனம் ஒன்றில் வர, அதற்கு மாணவிகள் வீதி தோறும் மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

ஊர்வலம் செல்லும் வீதிகள் மகர தோரணங்களாலும் வாழைகளாலும் அலங்கரிக்கப்பட்டு வீதிகளுக்கு நீர் தெளிக்கப்பட்டுக் காணப்பட்டது. பெருமளவிலான மக்கள் வீதிகளில் நின்று தமிழ் அன்னைக்கு தங்களது வணக்கத்தினைத் தெரிவித்துக் கொண்டனர்.

திருஞானசம்பந்தர் வீதி, பிரதான வீதி, விகாரை வீதி, உவர்மலை மத்திய வீதி வழியாக பண்பாட்டு ஊர்வலம் விழா நடைபெறும் உவர்மலை விவேகானந்தா கல்லூரியை வந்தடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X