2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மூதூரில் இளம் யுவதிகளுக்கான குறுகிய கால தொழிற் பயிற்சிகள்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 16 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மூதூர் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமங்களிலுள்ள இளம் யுவதிகளுக்கு கடந்த மாதங்களில் பல குறுகிய கால தொழிற்பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டன.

இதன் மூன்றாம் கட்டப் பயிற்சி எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட் பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ் அவர்களின் தலைமையில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மூதூரிலுள்ள தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பயிற்சி கடந்த 13ஆம் திகதி தொடக்கம் நேற்று 15ஆம் திகதி வரை நடைபெற்றது. மணப்பெண் அலங்காரம், அழகுக் கலை, சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் இதில் அடங்கும்.

இப்பயிற்சி நெறிகளுக்கு மூதூர் பிரதேச செயலாளர்
பிரிவிலுள்ள கிளிவெட்டி, பாட்டாளிபுரம், நாராயணபுரம், சந்தனவேட்டை, பட்டித்திடல், சின்னக்குளம் கிராமங்களைச் சேர்ந்த 40 இளம் யுவதிகள் பங்குபற்றினர்.

இப்பயிற்சிகள் அனைத்தையும் எஸ்.மயிலினி ஆசிரியை நடத்தினார். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் பெண்கள் தங்கள் வருவாயை பெறக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .