2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்து அரையிறுதியில் இந்தியா

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 27 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, இந்திய அணி தெரிவாகியுள்ளது. மொஹாலியில் அவுஸ்திரேலியாவுக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்றே, இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. முதல் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ஓட்டங்களைப் பெற்ற அவ்வணி, அதன் பின்னர் விரைவாக ஓட்டங்களைப் பெறத் தடுமாறியிருந்தது.

துடுப்பாட்டத்தில் ஆரொன் பின்ச் 43 (34), ஷேன் வொற்சன் ஆட்டமிழக்காமல் 31 (28), உஸ்மான் கவாஜா 26 (16) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஹார்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

161 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, வெற்றி இலக்கை அடைந்தது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 49 ஓட்டங்களுடனும் 14 ஓவர்களின் பின்னர் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களுடனும் தடுமாறிய இந்திய அணி, விராத் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் விராத் கோலி ஆட்டமிழக்காமல் 82 (51), யுவ்ராஜ் சிங் 21 (18) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், தனது இறுதி சர்வதேசப் போட்டியில் விளையாடிய ஷேன் வொற்சன், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக, விராத் கோலி தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம், முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மார்ச் 30ஆம் திகதியும் 2ஆவது அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளும் இந்தியாவும் 31ஆம் திகதியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X