2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஆர்சனலை வென்றது மன்செஸ்டர் சிற்றி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று (18) இடம்பெற்ற போட்டியொன்றில், பின்தங்கியிருந்து வந்து ஆர்சனலை வென்ற மன்செஸ்டர் சிற்றி, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியது.

அலெக்ஸிஸ் சந்தேஸிடமிருந்து பந்தைப் பெற்ற தியோ வோல்கொட் போட்டியின் ஐந்தாவது நிமிடத்திலேயே கோலொன்றைப் பெற, முதற்பாதி வரை ஆர்சனல் முன்னிலையில் காணப்பட்டது. இருந்தபோதும், டேவிட் சில்வாவிடமிருந்து பந்தைப் பெற்ற சாடியோ மனே, போட்டியின் 47ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கையை சமப்படுத்திய சிற்றி, கெவின் டி ப்ரூனேயிடமிருந்து பந்தைப் பெற்ற ரஹீம் ஸ்டேர்லிங், போட்டியின் 71ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் காரணமாக 2-1 என்ற கோல் கணக்கில் சிற்றி வென்றது.

ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக, முன்னிலையில் இருந்து பின்னர் ஆர்சனல் தோல்வியடைந்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 36 புள்ளிகளைப் பெற்று, தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு சிற்றி முன்னேறியுள்ளது.

இதேவேளை, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 2-1 என்ற கோல் கணக்கில் பேர்ண்லியைத் தோற்கடித்திருந்தது. டொட்டென்ஹாம் விட்ட தவறினால், அஷ்லி பார்ண்ஸ் கோலொன்றைப் பெற்றுக் கொள்ள பேர்ண்லி முன்னிலை பெற்றது. எனினும், கைல் வோக்கரிடமிருந்து பந்தைப் பெற்ற டெலே அல்லி அடுத்த ஆறு நிமிடங்களில் பெற்ற கோலின் காரணமாக கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்திய டொட்டென்ஹாம், மூஸா சிஸாகோவிடமிருந்து பந்தைப் பெற்ற டனி றோஸ், போட்டியின் 71ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் காரணமாக, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .