2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாக். வீரர் சுஹைப் மலிக்கின் கடவுச்சீட்டு திருப்பி ஒப்படைப்பு

Super User   / 2010 ஏப்ரல் 20 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலீஸôர் பறிமுதல் செய்து வைத்திருந்த பாஸ்போர்ட் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கிடம் செவ்வாய்க்கிழமை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
"ஷோயப் மாலிக் தரப்பு வழக்கறிஞர் நான் தான்' என்பதற்கான அடையாளத்தை ஜாவித் ரஸôக் கொடுத்ததை ஏற்றுக்கொண்ட கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதையடுத்து ரஸôக்கிடம் ஷோயபின் பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டது.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸôவை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ஆயிஷா சித்திக்கி என்பவர். தன்னை ஷோயப் ஏற்கெனவே திருமணம்  செய்துகொண்டார். தற்போது அதை மறைத்து சானியாவை திருமணம் செய்து கொள்ள மோசடி செய்கிறார் என்று ஹைதராபாதில் போலீஸôரிடம் புகார் செய்தார். இதையடுத்து ஷோயப்-சானியா திருமண திட்டம் பிரச்னைக்கு உள்ளானது. ஆயிஷா சித்திக்கின் புகாரை ஏற்று இந்த வழக்கு முடியும் வரை இந்தியாவை விட்டு செல்லக்கூடாது என்று கூறி ஷோயபிடம் இருந்த பாஸ்போர்ட்டை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.
முதலில் ஆயிஷாவின் புகாரை ஷோயப் மறுத்தார். பின்னர், ஆயிஷா குடும்பத்தாருக்கும் ஷோயப் மாலிக் தரப்பிலும் சமரசம் ஏற்பட்டது. ஆயிஷாவுடன் தான் செய்துகொண்ட திருமணத்தை ஒப்புக்கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றார் ஷோயப். இதைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்த புகாரை ஆயிஷா குடும்பத்தார் வாபஸ் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக ஷோயப் மீதான வழக்கு முடிக்கப்படுவதாக  தெரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றம், ஷோயப்பிடம் இருந்து பறிமுதல் செய்த பாஸ்போர்ட்டை அவரிடமே மீண்டும் ஒப்படைத்து விடலாம் என்று திங்கள்கிழமை உத்தரவிட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X