2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இங்கிலாந்தில் விளையாட முரளிக்கு விஸா கிடைத்தது

Super User   / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானிய புதிய விஸா விதிகள் குறித்து கவலை கொண்டிருந்த இலங்கையின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் இங்கிலாந்து பிராந்திய அணியில் விளையாடுவதற்கான பிரித்தானிய தொழில் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவரின் முகாமையாளர் குஷில் குணசேகர இன்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் குளோசெஸ்டஷயர் அணியில் எதிர்வரும்  ஜூன் மாதம் முரளி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் புதிய விதிகளின்படி அங்கு தொழில்புரிவோர் ஆங்கில மொழி பரீட்சையொன்றுக்கு கணினி மூலம் தோற்ற வேண்டும். ஆனால், முரளிதரன் தான் கணினி மற்றும் பரீட்சை குறித்து அச்சம் கொண்டுள்ளதாக முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து பிராந்திய போட்டிகளுக்கு முன்னதாக இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக முரளி புதன்கிழமை இந்தியாவுக்கு பயணமாக வேண்டியிருந்ததால் அவரின் பிரித்தானிய விஸாவை துரிதமாக வழங்க பிரித்தானிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தனக்கு விரைவாக உரிய விஸா வழங்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக பிரித்தானிய அதிகாரிகளுக்கு முரளி நன்றி தெரிவிப்பதாக அவரின் முகாமையாளர் குஷில் குணசேகர தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .