2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

“ கல்யாணி பொன் நுழைவு’’

Editorial   / 2021 நவம்பர் 23 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் ‘’ கல்யாணி பொன் நுழைவு’’ (Golden Gate Kalyani) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின்  மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய நாளை (24) மாலை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரால் திறந்து வைக்கப்படுமென  பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதை திறக்கப்பட்ட பின்னர் கொழும்பு நகரம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் என்பன ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டதால் கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

அதனால் அதிகரித்த  வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப தற்போதைய களனி பாலத்தின் கொள்ளளவு போதுமானதாக இல்லாததால்  மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக  மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்த வேளையில் அதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

 2012ஆம் ஆண்டு வருட ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டு 2013ஆம் ஆண்டு சாத்தியவள ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு இலங்கையில் முதற்தடவையாக அதி தொழில்நுட்ப கேபிள்களை பாவித்து புதிய களனி பாலம் அமைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X