2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வருகிறது போதைப் பொருள் பரிசோதனை

S.Sekar   / 2021 ஏப்ரல் 14 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இயங்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகளில் சுமார் 80 சதவீதமானவர்கள் போதைக்கு அடிமைப்பட்டவர்களாக இருப்பதாக வாகன ஒழுங்குபடுத்தல் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இந்த நிலையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் வகையில், பார ஊர்திகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரிகளில் போதைப் பொருள் பரிசோதனை ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இது ஒரு பாரதூரமான பிரச்சனை. இந்த விடயம் தொடர்பில் போதைப் பொருள் பரிசோதனையை ஒன்றை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவைக்கு பரிந்துரைக்கவுள்ளோம்.” என்றார்.

பார ஊர்தி விண்ணப்பதாரிகளில் பரிசோதனை திகதிக்கு ஒரு மாதத்துக்கு முன்னரான காலப்பகுதியினுள் அவர்களின் உடலில் ஏதேனும் வகையிலான போதைப் பொருள் அடங்கியுள்ளதாக என்பதை கண்டறியும் வகையில் இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

“பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர் போதைப் பொருள் பாவிப்பவராக இருந்தாலும், ஒரு மாத காலப்பகுதிக்கு அவர் பயன்படுத்தவில்லையாயின், போதைப் பொருளுக்கு அடிமையானவராக அவரை கருத முடியாது. ஏனெனில் போதைக்கு அடிமையானவர்களால் ஒரு வார காலத்துக்கு கூட போதைப் பொருள் பாவிக்காமல் இருக்க முடியாது.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .