2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெள்ளரிப்பழத்துக்குச் செல்வாக்கு...

Princiya Dixci   / 2016 மார்ச் 28 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெப்பத்தைத் தணிக்கும் அதிக நீர்த்தன்மையுள்ள வெள்ளரிப்பழத்துக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகமாக உள்ளமையினால் மாநகர சந்தை சதுக்கம் மற்றும் வீதிகள் என மக்கள் கூடும் இடங்களில் வியாபாரிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழங்களைக் கட்டிக்கொண்டு விற்பனை செய்கின்றனர்.

சுமார் 2 கிலோகிராம் எடையுள்ள வெள்ளரிப்பழம் ஒன்று, ரூபாய் 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகின்றது. 

இன்று திங்கட்கிழமை (28) காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையான 3 மணித்தியால இடைவெளியில் மட்டக்களப்பில் 31.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், அதிகூடிய வெப்பநிலையாக 32.4 பாகை செல்சியஸ் கடந்த செவ்வாய்க்கிழமை (22) பதியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. (படப்பிடிப்பு: எஸ். பாக்கியநாதன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .