2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் குஜராத் டைட்டான்ஸ்

Shanmugan Murugavel   / 2022 மே 11 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு, அறிமுக அணியான குஜராத் டைட்டான்ஸ் தகுதி பெற்றுள்ளது.

பூனேயில் நேற்றிரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் இரண்டு லீக் போட்டிகள் இருக்கையிலேயே தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறுவதை குஜராத் உறுதிப்படுத்தியுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் குஜராத் இருக்கின்ற நிலையில், இனிமேல் நான்காமிடத்துக்கு கீழ் அவ்வணி செல்ல சந்தர்ப்பங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற குஜராத்தின் அணித்தலைவர் ஹர்டிக் பாண்டியா, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத், மொஷ்சின் கான், ஆவேஷ் கானிடம் (2) விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும் ஷுப்மன் கில்லின் ஆட்டமிழக்காத 63 (49) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 145 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லக்னோ, யஷ் டயால் (2), மொஹமட் ஷமி, ரஷீட் கான் (4), சாய் கிஷோரிடம் (2) வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்து 13.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்ளையே பெற்று 62 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஷுப்மன் கில் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X