2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சம்பியன்ஸ் லீக்: காலிறுதியில் சிற்றி

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 16 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது.

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்றுப் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியிருந்த சிற்றி, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் வென்று 8-1 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

சிற்றி சார்பாக, எர்லிங்க் பிறோட் ஹலான்ட் ஐந்து கோல்களைப் பெற்றதோடு, இல்கி குன்டோகன், கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X