2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பதவி நீக்கப்பட்ட எவெர்ற்றன் முகாமையாளர்

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 24 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான எவெர்ற்றனானது, தமது முகாமையாளர் பிராங்க் லம்பார்ட்டை நியமித்து ஓராண்டுக்குள் பதவி நீக்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுடனான போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடந்த 12 போட்டிகளில் ஒன்பதாவது தோல்வியை எவெர்ற்றன் பதிவு செய்ததைத் தொடர்ந்தே லம்பார்ட் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் ரஃபேல் பெனிட்ஸை பிரதியிட்டு 16ஆவது இடத்தில் அப்போது பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் இருந்த எவெர்ற்றன் தரமிறக்கப்படுவதை லம்பார்ட் தடுத்தபோதும், தற்போது 20 போட்டிகள் முடிவில் 15 புள்ளிகளுடன் 19ஆவது இடத்தில் எவெர்ற்றன் காணப்படுகின்றது.

இந்நிலையில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான லீட்ஸ் யுனைட்டெட்டின் முன்னாள் முகாமையாளரான மார்செலோ பியெஸ்லா, லம்பார்ட்டை பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .