2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல் இல் பங்குபற்றுதல், ஊதியம் தொடர்பாக சர்ச்சை

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்தியன் பிறீமியர் லீக்கில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்படுகின்றமை மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்குப் போதிய ஊதியம் வழங்கப்படாமை ஆகியன குறித்துச் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துத் தொழில்முறைக் கிரிக்கெட் வீரர்களின் அமைப்பு இந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணி தனது பருவகாலத்தை ஆரம்பிக்கும் ஏப்ரல் இறுதி, மே ஆரம்பகாலப் பகுதியில் இந்தியன் பிறீமியர் லீக் தொடர் இடம்பெறுவதால் இங்கிலாந்து வீரர்கள் இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் முழுமையாகப் பங்குபற்ற முடியாத நிலை காணப்படுகிறது.

இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் முழுமையாகப் பங்குபற்ற முடியாததன் காரணமாக கெவின் பீற்றர்சன், ஒய்ன் மோர்கன் போன்ற ஒரு சிலரைத் தவிர, ஏனைய வீரர்களுக்கு இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் வாய்ப்புக் கிடைப்பதில்லை.

இந்நிலையில் அடுத்த தேசிய ஒப்பந்தம் ஒக்டோபர் மாதத்தில் வழங்கப்படவுள்ள நிலையில், அதன்போது வீரர்களுக்கு இந்தியன் பிறீமியர் லீக் தொடர் உட்பட ஏனைய டுவென்டி டுவென்டி லீக் தொடர்களில் பங்குபற்ற முடியாது போவதால் ஏற்படும் வருமான இழப்புக் குறித்துக் கவனமெழுப்பப்பட வேண்டும் என இங்கிலாந்துத் தொழில்முறைக் கிரிக்கெட் வீரர்களின் அமைப்புத் தெரிவித்துள்ளது.

டுவென்டி டுவென்டி லீக் தொடரில் பங்குபற்றாமல் விடுவதால் மாத்திரமன்றி, சாதாரணமாகவே இங்கிலாந்து வீரர்களின் ஊதியம் போதாமல் இருப்பதாக அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வீரர்களின் ஊதியத்தில் பாதியளவையே இங்கிலாந்து வீரர்கள் பெறுவதாகத் தெரிவித்துள்ள அவ்வமைப்பு, அவுஸ்திரேலிய வீரர்கள் இந்தியன் பிறீமியர் லீக் தொடர் உட்பட ஏனைய டுவென்டி டுவென்டி தொடர்களிலும் பங்குபற்றுவதைச் சுட்டிக் காட்டியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X