2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மட்டு. வைத்தியசாலையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படாது’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 மார்ச் 11 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெற்றி கம்பஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் எவராவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பது இனங்காணப்பட்டால் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படமாட்டார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் திருமதி கே.கலாரஞ்சினி தெரிவித்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்களும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் நேற்று (10) மாலை முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த வைத்தியசாலைப் பணிப்பாளர், இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியதற்கமைவாக, பெற்றி கம்பஸில் தடுத்து வைக்கப்படுவோர் எவரும் எந்தச் சிகிச்சைகளுக்காகவும் மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படமாட்டார்கள் எனவும், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார்.

இந்த உறுதியளிப்பின் பின்னரே, ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .